தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் கவனத்திற்கு:-
தருமபுரி மாவட்ட புத்தக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கு நூலகர் சி.சரவணன் எழுதும் மடல். வணக்கம்.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் புத்தகத்திருவிழா தொடர்பான செய்திகளை செய்தித்தாள்களில் படிக்கும்போதெல்லாம், தருமபுரியில் அப்படிப்பட்ட புத்தகத் திருவிழா நடக்காதா என்று நம்மில் பலரும் ஏங்கியிருக்கிறோம். அந்த ஏக்கம் அண்மையில் நடந்து முடிந்த புத்தகத்திருவிழா மூலம் நிறைவேறியுள்ளது. இந்த புத்தகத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் இரா.செந்தில், தோழர் சிசுபாலன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள இந்த நேரத்தில், என் மனதில் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த மனக்குறை ஒன்றைப் பற்றியும் உங்கள் முன் விவாதப் பொருளாக முன்வைக்க விரும்புகிறேன்.
தருமபுரி மாவட்டத்தில் எத்தனை பதிப்பகங்கள் உள்ளன? அவை பதிப்பித்த பழைய நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா? மாவட்டத்தில் எத்தனை எழுத்தாளர்கள் உள்ளனர்? எத்தனை கவிஞர்கள் உள்ளனர்? எந்தெந்த கவிஞரின் கவிதைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்துள்ளன? எந்தெந்த எழுத்தாளர்களின் கட்டுரைகள் எந்தெந்த பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன? தருமபுரி மாவட்ட படைப்பாளர்களின் கவிதைத் தொகுப்புகள் எத்தனை வெளிவந்துள்ளன? கட்டுரைத் தொகுப்புகள் எத்தனை வெளிவந்துள்ளன? தருமபுரி மாவட்டத்தைப் பற்றிய வரலாற்று நூல்கள் எத்தனை உள்ளன? இவற்றை எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா? தருமபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைப் பற்றிய கட்டுரைகள் எத்தனை எழுதப்பட்டுள்ளன? இவை யார் யாரால் எழுதப்பட்டன? அவை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா? தருமபுரி மாவட்ட கலை, இலக்கிய, பண்பாடு தொடர்பான கட்டுரைகள் எந்தெந்த இதழ்களில் வெளிவந்துள்ளன? அந்த இதழ்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுளளனவா? அவற்றை எழுதிய கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனவா? தருமபுரி மாவட்டத்திலிருந்து வெளிவந்த, வெளிவரும் சிற்றிதழ்கள் பற்றிய விவரங்கள் உள்ளனவா? பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இதழ்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளனவா? ஒளவை, அதியமான் சிறப்பு பற்றிய புத்தகங்கள், கட்டுரைகள் உள்ளனவா? தகடூர் பற்றி சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகள் உரைநடை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளனவா? தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆன்மிக, சுற்றுலாத் தளங்கள் பற்றிய புத்தகங்கள் உள்ளனவா? தமிழகத்திலேயே அதிக அளவிலான கல்வெட்டுகள் தருமபுரி மாவட்டத்தில்தான் உள்ளன என்று சொல்லப்படும்போது, அந்த கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளனவா?
இதுபோன்ற கேள்விகளுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை. நான் பணிபுரியும் நூலகத்துறையிலும் இதுபோன்ற எந்த ஒரு தரவும் இல்லை. உங்களில் எத்தனைபேரிடம் மேற்படி கேள்விகளுக்கு பதில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால், உங்களில் ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்விக்காவது பதில் இருக்கலாம். அந்த பதில்களை எல்லாம் தொகுத்து ஆவணப்படுத்த வேண்டும். கடந்த தலைமுறையினர் எழுதி வைத்தவை நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், அவர்களுக்கு அதன் அருமை தெரியாததும், பாதுகாக்கும் வழிமுறைகள் இல்லாததும்தான். ஆனால், நாமும் அப்படி இருக்கக்கூடாது.
நமது படைப்புகள் அனைத்தையும் இந்த தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொண்டால், அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்கின்ற சிந்தனை வரும்.
தற்பொழுது ஆவணங்களைப் பாதுகாக்க பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அனைத்து படைப்புகளையும் டிஜிட்டல் வடிவில் கொண்டுவரும் தொழில்நுட்பமும் வந்து விட்டது. நமது மாவட்ட படைப்புகள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் இணையத்தில் பதிவு செய்துவிட்டால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நமது மாவட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு நாம் செய்ய வேண்டியனவாக நான் கருதுவது:
1. தருமபுரி மாவட்டத்தில் உள்ள படைப்பாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக ஆர்வலர்கள் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்குவது.
2. மாவட்ட படைப்பாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்கள், பத்திரிகை கட்டுரைகள், கவிதைகள், மாவட்டத்தில் வெளிவந்த சிற்றிதழ்களின் பிரதிகள், மாவட்டத்தைப் பற்றிய புத்தகங்கள், மாவட்டத்தைப் பற்றிய தரவுகள், இதற்கு முன்பு மாவட்டத்தைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் முதலானவற்றைத் தொகுத்து நூலகம் ஒன்றை அமைப்பது.
3. மேற்கொண்ட விவரங்கள் அனைத்தையும் இணையத்தில் பதிவு செய்து, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் படித்து தொரிந்துகொள்ள வழிவகை செய்வது.
4. மாவட்டத்தில் உள்ள இளம் படைப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள்/ பயிலரங்கங்கள் நடத்துவது.
5. படைப்பாளர்களின் படைப்புகளை குறைந்த செலவில் புத்தகமாக வெளியிட தக்க ஆலோசனைகள் வழங்குவது.
6. மாவட்ட படைப்பாளர்களின் நூல்களுக்கான விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவது.
7. மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது.
இக்கடிதத்தில் நான் குறிப்பிட்டுள்ள கருத்துகளை நீங்கள் படிக்கும்போது உங்களுக்கு இன்னும் சில யோசனைகள் தோன்றலாம்.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, செயல் திட்டம் ஒன்றை வகுத்து, அதைச் செயல்படுத்தினால், அது நாம் கற்ற கல்விக்குச் செய்யும் தொண்டாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இது தொடர்பான உங்கள் கருத்துகளை அறிய நான் ஆவலாக உள்ளேன்.
அன்புடன்,
நூலகர் சி.சரவணன், கடத்தூர்.
தொடர்புக்கு: வாட்ச் ஆப் எண்: 8668192839.

Comments