நூலக நண்பர்களுக்கு நூலகர் சி.சரவணன் எழுதும் அன்பு மடல்.
வணக்கம்.
நான் எழுதியுள்ள ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் என்னும் நூல் இம்மாதம் தருமபுரியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது என்கின்ற செய்தியை தாங்கள் அறிவீர்கள். நூலக நண்பர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு எனது நூல் பற்றி கேட்டறிந்தனர். இது பற்றி உங்களிடம் சில கருத்துகளைப் பரிமாறிக்கெள்ள விரும்புகிறேன்.
நான் பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தில் மாநிலப் பொதுச் செயலாளராக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்துள்ளேன். எனது பதவிக்காலத்தில் நூலகர்களின் நலனுக்கும், பொது நூலகத்துறை வளர்ச்சிக்கும் நான் ஆற்றிய பணிகளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நூலக நண்பர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
“என் பணிகளைப் பற்றி எழுதி விளம்பரம் தேடிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தேன். “உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் செய்த பணிகள், அத்துடன் உங்களது பணிக்காலத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு கண்டீர்கள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்வது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்று நூலக நண்பர்கள் கூறினர்.
அவர்கள் சொல்வது சரி என்று உணர்ந்தேன். நான் நூலகத்துறையில் பணியில் சேர்ந்த நாள்முதல் மற்ற நூலகர்கள் சந்தித்திருக்க முடியாத பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருக்கிறேன்.
சங்கவாதியாகவும், தனி நபராகவும் நான் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம். அவற்றிற்கெல்லாம் எப்படித் தீர்வு கண்டேன் என்பதை மற்ற நூலகர்கள் தெரிந்துகொள்வது, அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வாய்ப்பாக இருக்கலாம்.
ஆதலால், நண்பர்களின் கோரிக்கையை ஏற்று நூலகத்துறையில் எனது அனுபவங்கள் சிலவற்றை தொடர் கட்டுரைகளாக எழுதி எனது வலைப்பூவில் பதிவு செய்தேன். எனது கட்டுரைகள், நான் எதிர்பார்த்ததைவிட அதிகமானோரால் வாசிக்கப்பட்டன. அந்தக் கட்டுரைகளை ஒரு நூலகரின் டைரி குறிப்புகள் என்ற தலைப்பில் கடத்தூர் பாரதி பதிப்பகத்தார் புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.
இது எனது வாழ்க்கை வரலாறு அன்று. நான் நூலகராகப் பொறுப்பேற்றபின் எனது பணிக்காலத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளில் சிலவற்றை மட்டும் தொகுத்து வழங்கியுள்ளேன். இதில் எள்ளளவும் கற்பனை இல்லை. மற்றவர் மனம் வருந்தும் என்று பல சம்பவங்களைத் தவிர்த்துள்ளேன். தவிர்க்க முடியாததை உள்ளது உள்ளவாறு எழுதியிருக்கிறேன்.
பாராட்டப்பட வேண்டியவர்களைப் பாராட்டியுள்ளேன். விமர்சனம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தவர்களை விமர்சித்துள்ளேன். அதுவும் எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து நாகரிகமாக, எழுதியுள்ளேன். எனக்கு எதிரியாக யாரையும் நான் நினைக்கவில்லை. இந்நூலில் உள்ளவை அனைத்தும் எதார்த்தமானவை. எல்லாச் சம்பவங்களுக்கும் ஆதாரங்களும் உண்டு, சாட்சிகளும் உண்டு. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுதவில்லை.
இந்நூலுக்கு வாழ்த்துச் செய்தி வழங்கிய பொது நூலகத்துறை முன்னாள் இயக்குநர் முனைவர் க. அறிவொளி அவர்களுக்கும், பிழைத்திருத்தம் செய்துகொடுத்த கடத்தூர் முத்தமிழ் மன்றத் தலைவர் நல்லாசிரியர் கோ.மலர்வண்ணன், சொல்லாக்கப் புலவர் நெடுமிடல் ஆகியோர்களுக்கும், இந்நூலை நன்முறையில் அச்சிட்டு வெளியிட்ட கடத்தூர் பாரதி பதிப்பகத்தாருக்கும் எனது மனமார்ந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூல் வெறும் காகிதக்கட்டு அன்று. இது எனது இதயம் ஆகும். இந்நூலை நீங்கள் படிப்பதன் மூலம் நீங்கள் நூலகத்துறையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். மேலும் இந்நூல் உங்கள் சேவையை மேம்படுத்திக்கொள்ள பயனுள்ளதாகவும் இருக்கலாம். இந்நூல் உங்களுக்கு நல்ல நண்பனாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இந்நூலை ஒவ்வொரு நூலக நண்பர்களும் வாங்கிப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்நூலின் விலை ரூ.80. நூலக நண்பர்களுக்கு தபால் செலவு உட்பட ரூ.50 மட்டுமே. நான்கைந்து நூலகர்கள் ஒன்றாகச் சேர்ந்து பணம் அனுப்பினால், புத்தகங்களை ஒரே தபாலில் அனுப்புவதற்கு வசதியாக இருக்கும். பணம் அனுப்பிய விவரத்தையும் முகவரியையும் கீழ் காணும் எண்ணுக்கு SMS அனுப்பவும்.
வங்கி கணக்கு எண்:
Indian bank, Kadathur branch.
A/c.No.6402581279
IFSC code: IDIB000K281
மேலும், இந்நூலை முழுமையாகப் படித்து உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மின்னஞ்சல்: saravanan.c.kadathur@gmail.com
வாட்ஸ்ஆப்: 8668192839
கைப்பேசி: 9442265816
இடம் : கடத்தூர், அன்புடன்,
நாள் : 19.08.2018. நூலகர் சி.சரவணன்

Comments