அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்
பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தியதன் மூலம் தமிழ்ப் படைப்புகள்
உலகறியச் செய்ததுடன், பல்வேறு மொழிகளிலுள்ள சிறந்த படைப்புகளை
மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியைச் சிறப்பாகச்
செய்ததற்காக நல்லாளுமை விருது நமது இயக்குநர் திரு. க.இளம்பகவத் அவர்களுக்கு இன்று
தமிழக முதல்வர் வழங்கியது, நம் அனைவருக்கும் கிடைத்த விருதாக எண்ணி
மகிழ்ச்சி அடைகிறோம்.
திரு. க. இளம்பகவத் அவர்களின் ஆளுமை அசாத்தியமானது. எந்த ஒரு சூழ்நிலையிலும்
தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர். எத்துணை இடர்பாடுகள் வந்தாலும்
அதைக் கடந்து செல்வதற்கு சில உத்திகளைக் கையாண்டு வருபவர்.
இவருக்கு எந்தப் பணி வழங்கப்பட்டாலும், அந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, தன் கீழ் பணிபுரியும் அனைவரையும் அரவணைத்து, அந்தத் துறையில் முத்திரை பதிப்பவர். இல்லம் தேடிக் கல்வியிலும், மகளிர் உரிமத் தொகை திட்டத்திலும் இவர் காட்டிய ஈடுபாடும் அர்ப்பணிப்பும் 'இளம் ஐஏஎஸ் அலுவலரான இவரை, ஒரு மூத்த ஐஏஎஸ் அலுவலராகப் பார்க்க வைத்தது'.

பொது நூலகத்துறை இயக்குநராக திரு. க.
அறிவொளி அவர்களுக்குப் பிறகு பொது நூலகத்துறை ஒரு பத்து ஆண்டுகளுக்கு (decade) மேலாக துறைத் தலைவர் இல்லாமல் முடங்கிப் போய்
இருந்தது. நூலகத் துறைக்கு தலைமை இல்லாத
காரணத்தால், என்னவெல்லாம் நடந்தன என்பதை நாம்
அனைவரும் அறிவோம்.
பொது நூலகத் துறை இயக்குநராகத் திரு. திரு க. இளம்பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்கும் படியாகச் செய்துவிட்டார்.
பொது நூலகத் துறை இயக்குநராகத் திரு. திரு க. இளம்பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு நடக்கும் படியாகச் செய்துவிட்டார்.
கவனிப்பாரற்று இருந்த நூலகத் துறையை, அனைவரும் கவனிக்கும் துறையாக மாற்றிய பெருமை திரு க. இளம்பகவத் அவர்களைச்
சாரும். விதிமுறைகள் இல்லாத நடைமுறைகளுக்கு விதிமுறைகளை வகுத்தார். தேவைப்பட்டால்
அரசாணைகள் பெற்றுத் தந்தார். நிதி ஆதாரங்களை கையாள்வது மையப்படுத்தப்பட்டது. மற்ற அதிகாரங்கள்
பரவலாக்கப்பட்டது. நூலகங்களுக்கும் தேவையான புத்தகங்களையும் பருவ இதழ்களையும்
நூலகர்களே தேர்வு செய்யும் அளவுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டது. இது ஒரு
துணிச்சலான முடிவு.
பணியாளர் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணியாளர்களின் மனதை
வென்றார். அவற்றுள் குறிப்பிடத்தக்கது,
பணி மாறுதலுக்கு
விதிமுறைகள் வகுத்து அரசாணை பெற்றுத்தந்து,
அதை முழுமையாக
நடைமுறைப்படுத்தியது.
பதவி உயர்வில் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு - கால முறைப்படி
ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் அளித்தது - கலியாக இருந்த நேரடி நியமன மாவட்ட நூலக
அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்குத் தடையாக இருந்த தடைகளை நீக்கி, மாவட்ட நூலக அலுவலர்கள் நியமிக்கப்பட்டது - மாவட்டம் தோறும் புத்தகக்
கண்காட்சிகள் நடத்தி புத்தக விற்பனைக்குப் பதிப்பாளர்களுக்கு வாய்ப்புகள்
உருவாக்கித் தந்தது - மண்டல அளவில் இலக்கியத் திருவிழாக்கள், மாவட்ட அளவில் இளைஞர் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தி நூலகத் துறையை மக்கள் இயக்கமாக பார்க்கும் வகையில்
செய்தது - நூலகங்களில் மூடிக்கிடந்த கணினிகளைத் தூசி தட்டி எடுக்க வைத்து, நூலகர்களை மவுஸ் பிடிக்க வைத்தது – என்று நீளும் சாதனைகள்.
எல்லாவற்றிக்கும் மேலாக, வெளிப்படையான நூல் கொள்முதல் கொள்கையை
உருவாக்கியது இவரது பெரும் சாதனை.
“இதெல்லாம் சாத்தியமா?” என்று பேசிய, எழுதிய பதிப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் இன்று இதன் போக்கைப் பார்த்து அமைதியாக இருக்கிறார்கள்.
“இதெல்லாம் சாத்தியமா?” என்று பேசிய, எழுதிய பதிப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் இன்று இதன் போக்கைப் பார்த்து அமைதியாக இருக்கிறார்கள்.
நூல் கொள்முதல் கொள்கையில் நூலகர்களுக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம்
கொடுத்திருப்பது ‘குருவி தலையில் பனங்காய் வைப்பது போல்’ என்று சொன்னவர்கள் பலர்
உண்டு.
நூலகர்களை எப்படியும் தயார் படுத்திவிடமுடியும் என்னும் இயக்குநரின் அதீத நம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன்.
மேலும், இந்தத் திட்டத்தைச் செம்மையாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான மென்பொருள் உருவாக்கவும், அந்த மென்பொருளை நூலகர்கள் எளிதாகப் பயன்படுத்துவதற்கு உகந்தவாறு வடிவமைக்கவும், மென்பொருள் மேம்பாட்டாளர்களுக்கு இரவு பகலாக ஆலோசனைகள் வழங்கி வரும் நமது இயக்குநரின் பணி அபாரமானது.

அத்துடன், நூலகங்களில் பழுதடைந்து பயன்படுத்த
முடியாத நூல்கள் ஏராளமாக இருப்பதால்,
புதிய நூல்கள்
வைக்க இடமில்லாமலும் நூலகங்கள் பொலிவு இல்லாமல் இருப்பதையும் அறிந்து அந்த நூல்களை
இருப்பு நீக்கம் செய்வதற்குக் கொள்கை வகுத்து,
இருப்பு நீக்கம்
செய்யும் நூல்களை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வாசகர் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு
அற்புத திட்டத்தையும் வகுத்துக் கொடுத்த இயக்குநருக்குப் பாராட்டுக்கள்.
இதேபோல் பழுதடைந்த இருப்பு நீக்கம் செய்ய முடியாத தளவாடங்களை இருப்பு நீக்கும் செய்ய ஒரு கொள்கை முடிவை இயக்குநர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நூலகர்களின் மனங்களில் ஒரு நல்ல செய்தி விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். எழுத இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இது போதும் என்று முடிக்கிறேன்.

‘அர்ப்பணிப்போடு,
சட்டத்துக்கும்
விதிமுறைகளுக்கும் உட்பட்டுச் செயல்படுபவர்களுக்குச் சோதனைகளும் விமர்சனங்களும்
நெருக்கடிகளும் வருவது இயல்பு. யாரும் விதிவிலக்கல்ல. சோதனைகளை, சாதனைகளாக மாற்றும் மந்திரக்கோல் நமது இயக்குநரிடம் உள்ளது. அதுதான்
‘நேர்மையும் மன உறுதியும்’.
அர்ப்பணிப்போடு பணிபுரிபவர்கள், பாராட்டுகளை எதிர்பார்ப்பதில்லை; அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அங்கீகாரம்தான். மூத்த அலுவலர்களுக்குக்கூடக் கிடைக்காத அங்கீகாரமும் விருதும் பாராட்டுகளும் இவருக்கு கிடைத்திருப்பது, இவரது அர்ப்பணிப்பான பணிக்காக.
இவரது பணி மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.

Comments