நூல் பயன்பாட்டுக் கழிவு – ஆயிரம் நூல்களுக்கு 3 நூல்கள் என்பதை 5 நூல்களாக உயர்த்தக் கோருதல்
அனுப்புநர்
சி.சரவணன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்,
பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்,
1,47, நல்லகுட்லஅள்ளி
ரோடு,
கடத்தூர் அஞ்சல்,
தருமபுரி மாவட்டம், 635303.
கைப்பேசி: 9442265816.
பெறுநர்
முதலமைச்சரின் தனிப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600009.
ஐயா,
பொருள்:
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை - நூலகங்களில் நூல்
பயன்பாட்டுக் கழிவு – ஆயிரம்
நூல்களுக்கு 3 நூல்கள்
என்பதை 5
நூல்களாக உயர்த்தக் கோருதல் – தொடர்பாக.
பார்வை: 1. பள்ளிக்கல்வித்
(கே2) துறை, அரசாணை
(நிலை) எண். 211, நாள்: 23.11.2005.
2. General Financial Rules 2017, Ministry of
finance, Department of expenditure, Rule 215 Physical verification of library
books.
தமிழ்நாடு
அரசு பள்ளிக் கல்வித் துறை, பொது
நூலக இயக்ககத்தின் கீழ் 1926 கிளை நூலகங்கள், 1914
ஊர்ப்புற நூலகங்கள் உட்பட மொத்தம் 4603
நூலகங்கள் இயங்கி வருகின்றன. இந்நூலகங்களில் வாசகர்கள் புத்தகங்களைக் கையாள திறந்த
அணுகல் அமைப்பு முறை (open access system) நடைமுறைப் படுத்தப்படுவதாலும், கண்காணிப்பு
காமிராக்கள், உயர்தொழில்நுட்ப
பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் இல்லாததாலும் நூலகங்களில் காணாமல் போகும் நூல்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பார்வை 1 இல்
காணும் அரசாணையில், 1000 நூல்கள் பயன்பாட்டுக்கு 3 நூல்கள்
பயன்பாட்டுக் கழிவாக ஏற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பொது
நூலகத்துறை நூலகங்களில் இருப்பு சரி பார்ப்பின்போது காணாமல் போகும் நூல்களில்
பயன்பாட்டுக் கழிவாக 1000 நூல்களுக்கு 3 நூல்கள்
என்று ஏற்கப்படுகிறது.
அவ்வாறு
கழிவு நூல்கள் கழிக்கப்பட்ட பிறகும், நூலகர்களுக்குத் தெரியாமல்
வாசகர்கள் எடுத்துச்செல்லும் நூல்களுக்கு நூலகர்கள் செலுத்தும் நூல் இழப்புத் தொகை, ஆண்டுக்காண்டு
அதிகரித்து வருகிறது. நூல்களின் விலை
அதிகரித்துள்ளதும், நூலகங்களில் நூல்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதும், நூலகப்பயன்பாடு
அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணமாகும்.
மத்திய
அரசின் நிதித்துறை, செலவினத்துறையின் 2005 ஆம்
ஆண்டு பொது நிதி விதியில் (Government of India, Ministry of Finance, Department of Expenditure, General Financial Rules, 2005) நூல் சரிபார்ப்புப் பணி மற்றும் நூல் இழப்பு, நூல் வாங்குதல் தொடர்பான விவரம் (Physical verification of
Library books, Loss of books & Procurement rules) தெளிவாக
தெரிவித்துள்ளது.
“ஒரு வருடத்தில் ஆயிரம் நூல்கள் இரவலாக
வழங்கப்பட்டாலோ கலந்தாலோசிக்கப்பட்டாலே 5 நூல்கள் இழப்பை நியாயமாக வழங்கலாம் என்றும்
அத்தகைய இழப்பை நேர்மையற்றதாகவோ, கவனக்குறைவா னதாகவோ கருத முடியாது. எனினும் ரூ.1000 (ரூபாய் ஆயிரம்) மதிப்புள்ள
நூல் மற்றும் அரிய நூல் காணாமல் போனால் மதிப்பு பொருட்படுத்தாமல் விசாரணை
மேற்கொண்டு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு விதி 194((ii)) - இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசின்
நிதித்துறை, செலவினத்துறையின் பொது நிதி விதி 215 ((ii)) இல் கீழ்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
General financial
rules 2017, Ministry of finance, Department of expenditure. Rule 215 Physical verification of Library books.
(ii) Loss of five volumes
per one thousand volumes of books issued/consulted in a year may be taken as
reasonable provided such losses are not attributable to dishonesty or
negligence. However, loss of a book of a value exceeding Rs. 1,000/- (Rupees
One thousand only) and rare books irrespective of value shall invariably be
investigated and appropriate action taken.
இவ்வாறு
நூல் இழப்பு தொடர்பாக மத்திய அரசின் விதிகள் தெளிவாக இருந்தபோதிலும், தமிழ்நாடு
அரசு பொது நூலகத்துறை, நூல் பயன்பாட்டுக் கழிவு 1000
நூல்களுக்கு 3 நூல்கள்
என்ற நிலையிலேயே உள்ளது. 1000 நூல்களுக்கு 5 நூல்கள்
என்று அரசாணை திருத்தப்படவில்லை.
நூலகர்களுக்குத்
தெரியாமல் வாசகர்கள் எடுத்துச் செல்லும் நூல்களுக்கு நூலகர்கள் பணம் செலுத்துவதால், நூலகர்கள்
மிகவும் பாதிப்புக் குள்ளாகின்றனர். இந்லையைப் போக்க, பார்வை 2 இல்
காணும் மத்திய அரசின் விதியின்படி நூல் பயன்பாட்டுக் கழிவை 1000
நூல்களுக்கு 5 நூல்கள்
என்று உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம்:
கடத்தூர், இப்படிக்கு,
நாள்: 10.06.2019. தங்கள்
உண்மையுள்ள,
Comments