மூன்றாம் நிலை நூலகர் சீனியாரிட்டியில் அப்படி என்ன பிரச்சனை?
அண்மையில் மூன்றாம் நிலை நூலகர்கள் சிலருக்கு இரண்டாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் 2006 அக்டோபர் பேட்ச் நூலகர்களும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் சீனியாரிட்டி முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தப்பட்டார் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நூலகர் திரு. சிவகுமார்.
“சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிடாமல் எப்படி மூன்றாம் நிலை நூலகர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது? நன்றாக சரி பார்த்துச் சொல்லுங்கள்” என்றேன். சில ஆதாரங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்த்து வியந்தேன்.
“மாநிலம் முழுவதும் நூலகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. நீங்கள் பொதுச் செயலாளராக ஏழு, எட்டு ஆண்டுகள் இருந்தீர்கள். இதைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரியும். நீங்கள்தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்” என்றார்.
நான் சொன்னேன், “ 2006 பேட்ச் சீனியாரிட்டி லிஸ்டில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய சீனியாரிட்டி லிஸ்ட் வெளியிட்டு, அதன்படி பதவி உயர்வு வழங்குங்கள் என்றும், அதுவரை தற்பொழுது வழங்கப்பட்ட பதவி உயர்வை நிறுத்தி வையுங்கள் என்றும் பொதுநூலக இயக்குனர் அவர்களுக்கு உடனடியாக கோரிக்கை வையுங்கள்” என்றேன்.
இந்த சீனியாரிட்டியில் உள்ள குளறுபடி பற்றி எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
இதோ ஒரு பிளாஷ்பேக்.
2006 அக்டோபர் 26 நாள் வியாழக்கிழமை காலை 554 ஊர்ப்புற நூலகங்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அப்பொழுது நான் தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தேன். தர்மபுரி மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்கள் இல்லாததால், நான் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டேன். தருமபுரி மாவட்டத்தில் வாய்ப்பு கிடைத்த நாலகர்கள் பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர் திரு. ரத்தினத்தைச் சந்தித்து முற்பகல் பணியில் சேர்ந்ததாக சேர்க்கை அறிக்கை கொடுத்தனர். அப்பொழுது பொறுப்பு மாவட்ட நூலக அலுவலர் அதை ஏற்க மறுத்து, பிற்பகல் பணியில் சேர்ந்ததாக அறிக்கை கொடுக்கச் சொன்னார். நூலக நண்பர்கள் சிலர் மாவட்ட நூலக அலுவலரிடம், “திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முற்பகல் பணியில் சேர்ந்ததாக அறிக்கை கொடுத்து இருக்கும்போது, தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் பிற்பகல் பணியில் சேர்ந்ததாக அறிக்கை கொடுப்பதால் எதிர்காலத்தில் சீனியாரிட்டி பிரச்சனை வரும். எங்கள் பேச்சில் நம்பிக்கை இல்லை என்றால் திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலரிடம் தொலைபேசியில் பேசுங்கள்” என்று கேட்டனர். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
நூலக நண்பர்கள் முற்பகல், பிற்பகல் என்று அடிபட்டுக் கொண்டு இருக்க, நான் கடலூர் மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டதால் சனிக்கிழமைதான் பணியில் சேர முடியும் என்பதால் எனக்கு அவர்களைவிட பெரிய அளவில் சீனியாரிட்டி பாதிப்பு இருக்கும் என்று நினைத்தேன். உடனே, இயக்குநர் அலுவலக தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு பேசினேன். சரியான பதில் இல்லை. கண்காணிப்பாளர் திருமதி சுமதி அவர்களின் தொலைபேசி என்னை தேவராஜ் கொடுத்தார். நான் அன்று மாலை 5 மணிக்கு கண்காணிப்பாளர் திருமதி சுமதி அவர்களின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு பேசினேன். “வியாழக்கிழமை பதவி உயர்வுக்கான உத்தரவு கொடுக்கும்போது பல பிரச்சனைகள் எழுகின்றன. சிலர் முற்பகல் என்றும், சிலர் பிற்பகல் என்றும் பணியில் சேர்ந்த அறிக்கை கொடுக்கின்றனர். உள் மாவட்டத்தில் இடம் இல்லாதவர்கள் இரண்டு நாள் கழித்து தான் வெளி மாவட்டத்தில் பணியில் சேர முடியும். அனைவரும் ஒரே நாளில் பணியில் சேருமாறு நாள் குறிப்பிட்டு ஆணை வழங்கி இருக்கலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர் “இயக்குநரிடம் பேசுகிறேன், அரைமணி நேரம் கழித்து கூப்பிடுங்கள்” என்றார். நானும் அரை மணி நேரம் கழித்து போனில் தொடர்பு கொண்டேன். அப்பொழுது அவர், "உங்களுக்கு எந்த சீனியாரிட்டி பாதிக்கும் வராது என்று இயக்குநர் கூறுகிறார். நீங்கள் பயப்படத் தேவையில்லை” என்றார். (திருமதி சுமதி அவர்கள் தற்போது உதவி இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது).
சில மாதங்களில் இயக்குநர் திரு பழனிசாமி அவர்களுக்கு ஐஏஎஸ் ஆக பதவி உயர்வு கிடைத்தது. அப்பொழுது அவருக்கு வாழ்த்து சொல்ல நானும் திரு எம். ஜி. செல்வம் அவர்களும் இயக்குநரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து சொன்னோம் (பார்க்க படம்). அப்பொழுது இயக்குநரிடம் இந்த சீனியாரிட்டி பிரச்சனையைப் பற்றி பேசினேன். "நீங்கள் ஒரு பேனல் (VL seniority) மூலம் பணியமர்த்தப்பட்டீர்கள். அந்த பேனல்தான் seniority. முற்பகல், பிற்பகல், அடுத்த நாள் என்று எப்பொழுது பணியில் சேர்ந்தாலும் அந்த பேனல்படிதான் Gr.III seniority வைக்க முடியும். இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது” என்றார் இயக்குநர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனியாரிட்டி லிஸ்ட் வந்தது. அதில் நான் என்ன சந்தேகப் பட்டேனோ அப்படியே நடந்து விட்டது. முற்பகல், பிற்பகல், அடுத்த நாள் என்று சீனியாரிட்டி லிஸ்ட் வந்தது. அப்பொழுது இயக்குநராக இருந்தவர் திரு ரமணி அவர்கள். அவரிடம் இதைப் பற்றி பேசினேன். “கண்காணிப்பாளரைப் பாருங்கள்” என்றார். அப்பொழுது கண்காணிப்பாளராக இருந்தவர் திருமதி ரஜினி அவர்கள். அவரிடம் கேட்டேன். அவரோ, “சேர்க்கை அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அப்படித்தான் சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்க முடியும்” என்றார். உடனே இயக்குனரைச் சந்தித்து முறையிட்டேன். அவரோ, “உங்கள் பிரச்சனையை எழுதி கொடுத்து விட்டு செல்லுங்கள். ஃபைனல் லிஸ்ட் தயாரிக்கும் போதும் சரி செய்து கொள்கிறோம்” என்றார்.
இதனிடையே இயக்குனர்கள் மாறினார்கள். இயக்குநர் திரு அறிவொளி அவர்களிடம் பேசினேன். அப்பொழுது நான் மாநில பொதுச் செயலாளராக இருந்ததால் சங்க லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்தேன். “புதிய லிஸ்ட் தயாரிக்கும்போது சரி செய்துக் கொள்ளலாம்” என்றார். சில மாதங்களுக்குப் பிறகு (அக்டோபர் 2011) திரு நரேஷ், இணை இயக்குனர் அவர்களிடம் இது பற்றி பேசினேன். என்னுடைய தபாலை வாங்கிப் பார்த்த அவர் “நீங்கள் ஒரு பேனல் மூலம் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஊர்ப்புற நூலகர் சீனியாரிட்டி தான் பொருந்தும்” என்றார். நான் பொதுச் செயலாளராக இருந்த வரை ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை இந்த பிரச்சினைப் பற்றி இயக்குநர்களிடம் கடிதம் கொடுத்து பேசியிருக்கிறேன். அவர்கள் சொன்னதை நான் நம்பி இருந்தேன் .
ஆனால், தற்பொழுது புதிய seniority list வெளியிடாமல் பதவி உயர்வு அளிக்கப்பட்டது வியப்பாக உள்ளது.
இதனிடையே இயக்குனர்கள் மாறினார்கள். இயக்குநர் திரு அறிவொளி அவர்களிடம் பேசினேன். அப்பொழுது நான் மாநில பொதுச் செயலாளராக இருந்ததால் சங்க லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்தேன். “புதிய லிஸ்ட் தயாரிக்கும்போது சரி செய்துக் கொள்ளலாம்” என்றார். சில மாதங்களுக்குப் பிறகு (அக்டோபர் 2011) திரு நரேஷ், இணை இயக்குனர் அவர்களிடம் இது பற்றி பேசினேன். என்னுடைய தபாலை வாங்கிப் பார்த்த அவர் “நீங்கள் ஒரு பேனல் மூலம் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு அந்த ஊர்ப்புற நூலகர் சீனியாரிட்டி தான் பொருந்தும்” என்றார். நான் பொதுச் செயலாளராக இருந்த வரை ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை இந்த பிரச்சினைப் பற்றி இயக்குநர்களிடம் கடிதம் கொடுத்து பேசியிருக்கிறேன். அவர்கள் சொன்னதை நான் நம்பி இருந்தேன் .
ஆனால், தற்பொழுது புதிய seniority list வெளியிடாமல் பதவி உயர்வு அளிக்கப்பட்டது வியப்பாக உள்ளது.
“நூலகர்கள் அனைவரும் முற்பகல் பணியில் சேர்ந்ததுபோல் வைக்க வேண்டும்” என்று இயக்குநருக்கு நூலகர்கள் பலர் மனு செய்வதாக் கேள்விப்பட்டேன். இது தவறான கோரிக்கை.
என்னுடைய கருத்து என்னவென்றால் நாம் 2006 ஆம் ஆண்டு அரசாணை 64 மூலம் 554 ஊர்ப்புற நூலகர்கள், மூன்றாம் நிலை நூலகர்களாக ஒரு முறை மட்டும் (ஒன் டைம் அப்சர்வேஷன்) பணி நிரப்பப்பட்டோம். ஒரு முறை நிரப்பிக் கொள்ளளாம் என்றுதான் அரசாணை 64 கூறுகிறது. பதவி உயர்வு என்று இந்த அரசாணை கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (One time absorption, not one time promotion) . அப்படி பார்த்தோமானால், நாம் அனைவரும் ஊர்ப்புற நூலகர் சீனியாரிட்டி பட்டியல் மூலம் மூன்றாம் நிலை நூலகர்களாக ஒரு முறை மட்டும் பணி நிரப்பப்பட்டோம். ஆகவே, பதவி உயர்வு என்று கருதி, முற்பகல், பிற்பகல் என்று பார்த்து சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்கப்பட்டது தவறு. 554 ஊர்ப்புற நூலகங்கள், எந்த வரிசைபடி மூன்றாம் நிலை நூலகர்களாகப் பணியமர்த்தப்பட்டார்களோ, அந்த வரிசைப்படி தான் மூன்றாம் நிலை நூலகர்களுக்கான பணி மூப்புப் பட்டியல் வெளியிட வேண்டும்.
நன்றி.
நன்றி.
- சி.சரவணன். முன்னாள் மாநிலப் பொதுச் செயலாளர், பொது நூலகத்துறை அலுவலர் சங்கம்.

Comments
புரியவில்லையே?