தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர்கள் - படைப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று 23.9.2018 ஞாயிற்றுக்கிழமை தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வாசிப்பை நேசிப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் நூலகர் சி.சரவணன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தகடூர் புத்தகப் பேரவை தலைவர் சிசுபாலன், நாகை பாலு, மலர்வண்ணன், தகடூர் தமிழ்கதிர், வாழ்வியல் முன்னேற்றம் ஆசிரியர் நாகராஜன், சுதாகரன், இராசகுமாரன் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக திருவள்ளுவர் புத்தக இல்லம் அறிவுடைநம்பி வரவேற்றார். முடிவில் நூலகர் தீ. சண்முகம் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.    தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட பதிப்பாளர், படைப்பாளர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்குவது. இதன் ஒருங்கிணைப்பாளராக நூலகர் சி.சரவணன் செயல்பாடுவது.
2.    மாவட்டத்தில் செயல்படுகின்ற அனைத்து இலக்கிய அமைப்புகள், தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடந்துவது. இதனையொட்டி அரூர் பென்னாகரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் தனி கூட்டங்கள் நடத்துவது.
3.    மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டை ஒட்டி அக்டோபர் மாதத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை போட்டிகள் நடத்தி பரிசு அளிப்பது.  இதன் மூலம் இளம் இலக்கியவாதிகளை அடையாளம் காண்பது.
4.    நவம்பர் மாதத்தில் இளம் படைப்பாளர்களுக்கான கவிதை, சிறுகதை பயிற்சி பட்டறைகள் நடத்துவது.
5.    படைப்பாளர்களின் படைப்புகள் வெளிவர உதவி செய்வது.
6.    மாவட்ட படைப்பாளர்களின் நூல்களைத் தொகுத்து ஆவணப்படுத்துவது.
7.    இந்த அமைப்புக்கு தனியாக இணையதளம் தொடங்கி,  மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளை இணையத்தில் வெளியிடுவது.

Comments